மானமதுரை - Manamadurai

மானாமதுரையில் எம்பி கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு பேட்டி

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி வாக்காளர்களுக்கு  கார்த்தி சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.   பின்னர் காந்தி சிலை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து இன்று எம் பி கார்த்திக் சிதம்பரம் பேசுகையில்: கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை, அதை அரசியலோடு சேர்க்க கூடாது. இதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதை வரவேற்கிறேன்.  காவிரி பிரச்சினையை பொறுத்தவரை 2 மாநிலங்கள் சேர்ந்து பேசி முடிக்கலாம். இல்லாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகலாம். அங்கும் முடியாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடலாம். இதன்மூலம் எப்படியும் தமிழகம் தண்ணீர் கிடைக்கும்.  கூவாம் நதி மறுசீரமைப்பு திட்டம் குறித்து சென்னை மேயரிடம் வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோஸ்


சிவகங்கை
சிவகங்கையில் பொதுமக்கள் அவதி
Sep 30, 2024, 17:09 IST/சிவகங்கை
சிவகங்கை

சிவகங்கையில் பொதுமக்கள் அவதி

Sep 30, 2024, 17:09 IST
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்காக மூடப்பட்ட நிலையில், தொண்டி ரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு ரூ. 1. 95 கோடியில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு மார்ச் 8ல் துவங்கியது. ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை. இதனால், தினமும் ரூ. 10 ஆயிரம் அபராதத்தை ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டிற்குள் 18 கடைகள், நுழைவு வாயில் ஆர்ச், தரைதளம், கழிப்பிடம் கட்ட வேண்டும். ஒப்பந்ததாரர் பணியை முடிக்காததால், விரைந்து முடிக்கும் நோக்கில் தற்போது பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டன. இதனால், தொண்டி ரோட்டில் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விரைந்து பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்க வேண்டும் என்றனர்.