மானமதுரை - Manamadurai

சிவகங்கை: டிராபிக் புறக்காவல் நிலையம் திறப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டிராபிக் புறக்காவல் நிலையத்தை எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே திறந்து வைத்தார். மதுரை ராமேஸ்வரம் 4 வழிச்சாலை ஓரத்தில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினம்தோறும் 400க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் நான்கு வழிச்சாலை ஓரத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால் இங்கிருந்து பஸ்கள் வெளியேறும் போதும், உள்ளே வரும்போதும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் பலியாகி உள்ளனர். இதனை தவிர்க்கும் விதமாக மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி நிரேஷ், புது பஸ் ஸ்டாண்ட் அருகே நான்குவழிச் சாலையில் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் உள்ளே செல்லும் வழியிலும், வெளியே செல்லும் வழியிலும் ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்து விபத்தை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பஸ்ஸ்டாண்ட் வளாகத்திற்கு வெளியே டிராபிக் புறக்காவல் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ். பி. , பிரவீன் உமேஷ் டோங்கரே அதனை திறந்து வைத்தார். இங்கு காலை முதல் இரவு வரை போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், இவ்வழியாக செல்லும் வாகனங்களையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

வீடியோஸ்


சிவகங்கை