சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய். களத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிப்காட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராகார்ஜுனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டார்.
அந்த சோதனையில் செய்களத்தூர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் வயது (19)
இவர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இவரிடமிருந்து 66 கிராம் கஞ்சாவை பறிமுதல் சிப்காட் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரியின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.