பேரூராட்சி அலுவலகம் முன்பு பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

63பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்(தி. மு‌. க நகரச்செயலர் )தலைமையில் நடைபெற்றது. பொறுப்பு செயல் அலுவலர் சண்முகம் முன்னிலையில் வகித்தார். இதில் இளையாங்குடி பேரூராட்சி உட்பட்ட 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இளையான்குடியில் உள்ள 15 வது வார்டு திமுக கவுன்சிலர் இஸ்ரின் பேகம் பேசுகையில்,
எனது வார்டில் இரண்டு வருடங்களாக புதியமின் கம்பங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்து தர போராடி வருகிறேன். இதற்காக பல மனுக்களும் கோரிக்கைகளும் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மக்கள் கேள்விக்கு பதில் கூற முடியாத நிலை மற்றும் மக்களை சந்திக்க இயலாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
என்று ஆத்திரத்துடன் பேசிவிட்டு கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்து பேரூராட்சி அலுவலகம் முன்பாக பெட் சீட்டை விரித்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது பேரூராட்சி அலுவலகம் உள்ளே அமர வைக்கப்பட்டுள்ளார். எனவே பரப்பான சூழ்நிலை நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி