சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலைய பகுதியில் அடையாளம் தெரியாத 47 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படும் நிலையில் புதிய கழிப்பிட கட்டிட பணிக்காக கொட்டப்பட்டிருந்த செங்கல் கற்கள் கொட்டி வைக்கப்பட்ட நிலையில் அதை கவனிக்காமல் சென்ற ஆண் கால் இடறி கல்லில் அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக இங்கே வந்தார் என்ற பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.