சிவகங்கை மாவட்டம் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம் அருகே லாடனேந்தல் என்ற இடத்தில் டவுன் பஸ் மோதியதால் சாலையோரம் இருந்த நாவல் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரையில் இருந்து திருப்புவனம், லாடனேந்தல் வழியாக பரமக்குடி, ராமேஸ்வரம் சென்ற வாகனங்களும், அங்கிருந்து வந்த வாகனங்களும் இரு புறமும் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றன. போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மரத்தை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றி சாலையில் போக்குவரத்தை சீர் செய்தனர்.