ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம் ஊத்திகுளம் அருகே உள்ள காட்டுபுலி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காளேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது முன்னதாக மூலவர் காளேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு ஐந்து முகம் கொண்ட திருவிளக்கை அலங்கரித்து தீபம் ஏற்றப்பட்டன பின்னர் கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் நேர்த்தியாக அமர்ந்து மங்கள பொருட்கள் வைத்து ஐந்து முகம் கொண்ட திருவிளக்கை வைத்து கணபதி பூஜை செய்து தீபம் ஏற்றினர் அர்ச்சகர் போற்றி மந்திரங்கள் கூற பெண்கள் திருவிளக்கிற்கு குங்குமம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து விளக்கு பூஜையை செய்தனர் இதனை தொடர்ந்து தீப தூப ஆராதனை ஒருமுக கற்பூர தீபம் காண்பித்தனர் நிறைவாக மூலவர் காளேஸ்வரர் சுவாமிக்கு பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி