பாலம் கட்டுமான பணி, எதிர்ப்பு தெரிவித்த கிராமப் பொதுமக்கள்

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலில் சுடுகாட்டை ஆக்கிரமித்து பாலம் கட்டும் பணிக்கு கிராமப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டது. லாடனேந்தல் மற்றும் மணல்மேடு இடையே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2022 ல் 18 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. வைகை ஆற்றினுள் பாலத்திற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதியை இணைக்கும் பணி நடந்து வருகிறது. லாடனேந்தல் கிராமத்திற்கான பொது சுடுகாடு ஒரு ஏக்கர் 15 சென்ட் பரப்பளவில் உள்ளது. இதில் 40 சென்ட் பரப்பளவில் பாலம் அமைய உள்ளது. இதற்காக ஒப்பந்தகாரர்கள் இன்று பணிகளை தொடங்கிய போது கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி