சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யூனியனுக்குட்பட்ட கீழநெட்டூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி ராஜேஸ்வரி தம்பதியின் மகள் சரண்யா (வயது 24). இவருக்கு சிறுவயதில் இருந்து கண் பார்வை குறைவாக இருந்துள்ளது. சிறிது நாட்கள் மட்டும் சிறிது பார்வையோடு வாழ்ந்து வந்த சரண்யா காலப்போக்கில் முழுமையாக கண்பார்வை இல்லாமல் கஷ்டப்பட்டு உள்ளார். தந்தை உடல்நலக் குறைவால் உயிர் இழக்கவே குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு தனது தாயாருடன் மேலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியரின் உதவியோடு மதுரையில் உள்ள கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் படித்து முடித்துள்ளார். இவர் விளையாட்டுப் போட்டியிலும் திறமை வாய்ந்தவராக திகழ்ந்து மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வறுமையின் பிடியில் வாழ்ந்து வருவதாகவும், சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்தி தர வேண்டும் என லோக்கல் ஆப்பில் செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் இன்று(செப்.18) அதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், மாற்றுத்திறனாளியின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ. 3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான ஆணையினையும் வழங்கினார்.