சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புகழ்பெற்ற பிரான்ஸ் கோதிக் கலை சிறப்பு நுணுக்கத்துடன் கட்டப்பட்ட இடைக்காட்டூர் திருத்தல திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை இம்மானுவேல் தாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறந்தவுடன் புத்தாண்டை வரவேற்கிறவிதமாக ஒருவருக்கொருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் அதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.