திருப்புவனத்தில் பள்ளி மாணவன் தற்கொலை

61பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த ஸ்டாலின் - லிங்கேஸ்வரியின் மூத்த மகன் ஆதீஸ்வரன் (16) திருப்பாச்சேத்தி அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதி வரும் ஆதீஸ்வரன், நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆதீஸ்வரனை அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் அழைத்துச் சென்று தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தாக்கிய 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி, மாணவனின் உறவினர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து 30 நிமிடங்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திருப்புவனம், திருப்பாச்சேத்தி போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி