சிவகங்கை: ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் விற்பனை

79பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தை, இந்த வாரம் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு மிகுந்த களையுடன் நடைபெற்றது. வியாபாரிகளும் விவசாயிகளும் தங்களுடைய ஆடுகளை விற்பனைக்காக திருப்புவனம் சந்தைக்கு கொண்டு வந்தனர். இதனை வாங்க பல ஊர்களிலிருந்து பொதுமக்களும் வியாபாரிகளும் திரளாக வந்திருந்தனர். 

இதனால், ஆட்டுச் சந்தை அதிகாலை 6 மணிக்கு ஆரம்பமாகி காலை 11 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. சந்தையில் இன்று மட்டும் சுமார் ரூ. 3 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்றைய சந்தையில் 5 கிலோ குட்டியிலிருந்து 40 கிலோ வரை கொண்ட ஆட்டுகிடாக்கள் விற்பனையாகியுள்ளன. விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி