சிவகங்கையை அடுத்துள்ள தமறாக்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி மகன் 29 வயதான மனோஜ்பிரபு. இவரது குடும்பம் தற்சமயம் சக்கந்தி கிராமத்தில் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து அன்மையிலேயே சொந்த ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது ஹரிகரன், அஜித்குமார். இரு நண்பர்களுடன் அருகில் உள்ள இடையமேலூர் திருவிழாவில் நடைபெறும் கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சக்கந்தி நோக்கி திரும்பியுள்ளார். புதுப்பட்டி அருகே வரும்போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளியதுடன் தப்பியோட முயன்ற மனோஜ்பிரபுவை மட்டும் விரட்டி சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு மீண்டும் காரில் ஏறி தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் சமரசம் பேசி வருகின்றனர்