மானாமதுரையில் திடீர் மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இன்று திடீரென பெய்த கனமழையால் மானாமதுரை நகராட்சி எல்லைக்குள் உள்ள 10-வது வார்டின் காந்திஜி நகரில் நகராட்சியில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் பெரிதளவில் தேங்கியது.

பள்ளமான பகுதியில் அமைந்துள்ள இந்த வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். நிலைமைக்குத் தீர்வு காண நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் தாயமங்கலம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நகராட்சி மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு விலகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி