மருத்துவர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் மானாமதுரை, நவதாவு சன்னதி புதுக்குளம் மேலநெட்டூர், தெ. புதுக்கோட்டை, ஆலங்குளம் நல்லாண்டிபுரம் ராஜகம்பீரம் கால்பிரிவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 350நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் இங்கு உள்நோயாளிகளாக சுமார் 40க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் இருக்க வேண்டிய சூழ்நிலையில் 3 மருத்துவர்கள் மட்டும் தற்போது பணியில் உள்ளதாகவும் இதனால் முறையாக பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் மாத்திரை வழங்கும் இடத்தில் முறையாக பொதுமக்களுக்கு மாத்திரை வழங்கப்படவில்லை எனவும் துப்புரவு பணியாளர்கள் பணியில் இல்லாத காரணத்தால் மருத்துவமனை வளாகம் சுகாதார கேடாக காட்சியளிப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் முறையாக மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி