லாடனேந்தல் பகுதியில் இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

576பார்த்தது
லாடனேந்தல் பகுதியில் இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல்பகுதியைச் சேர்ந்த சுபிக்ஷா (19). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், வீட்டில் இருந்தவர் திடீரென மாயமாகிஉள்ளார். அக்கம் பக்கத்தில் இளம் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் திருப்புவன காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி