காவல்துறை அத்துமீறல்: OPS கடும் கண்டனம்

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், காவல்துறை சட்டத்தை மீறி செயல்பட்டதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதை அவர் கடுமையாக கண்டித்துள்ளார். அதிமுக மீட்பு குழுவின் சார்பில் அவர் கூறியதாவது, “இந்த சம்பவம் மிகுந்த அத்துமீறலாகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறை தட்டி கேட்காததால்தான், தவறு செய்பவர்களுக்கு தைரியம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை மாற வேண்டும். இல்லையெனில் திமுக மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும்” என்றார். மேலும், “தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையாக வாதாடி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என்றும் கூறினார். அதிமுக தேர்தலுக்குள் ஒருங்கிணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஜோசியர் அல்ல; எனவே அதைப்பற்றி கணிக்க முடியாது” என்றார். அதிமுக தொண்டர்களின் உரிமைகளை காக்கவும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கவும், தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். தன்னைப்பற்றி அவர் கூறுகையில், “நான் இந்திய கூட்டணியின் ஒரு அங்கமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்” என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி