மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரைச்சுற்றிலும் 25மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராம மக்கள் பலரும் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். முதலுதவி சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்குதான் கொண்டு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 350-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் 60க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது காய்ச்சல், போன்ற நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
15டாக்டர்கள் இருக்க வேண்டிய அரசு மருத்துவமனையில் 4 டாக்டர்கள் மட்டுமே இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. பல மாதங்களாக டாக்டர் பற்றாக்குறை பலமுறை புகார் சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி