பாலாடையில் முருகக் கடவுளின் ஓவியம் இணையத்தில் வைரல் வீடியோ

55பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி, பாலாடையில் முருகக் கடவுளின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
பழங்கள், மயில் இறகுகள், இலைகள், பென்சில் போன்ற நுணுக்கமான பொருட்களில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், சாமி படங்கள், திரைப்பட நடிகர்களின் படங்களை தத்ரூபமாக வரைவதில் வல்லவர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சன்னிதானம் மற்றும் ஐயப்பனின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அங்குள்ள மேல்சாந்தியிடம் பாராட்டுப் பெற்றார்.
தற்போது பாலாடையில் முருகக் கடவுளின் படத்தை வரைந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
கார்த்தியின் இந்தத் திறமை மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவரது ஓவியங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரது பாராட்டுகளையும்மதியம் சுமார் இரண்டு மணி அளவில் பெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி