திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம்.

82பார்த்தது
சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில், வருகின்ற 21. 06. 2024 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் திருநங்கையர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய நலத்திட்ட சேவைகளைப் பெற உரிய சான்றாவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04575 240426 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 88838 67926 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியில் உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி