சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியத்தில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொல்லியல் துறையால் கண்டெடுத்து காட்சிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேற்று புத்தாண்டு விடுமுறை என்பதால் அதிகமான பொதுமக்களும் மாணவ மாணவிகள் இளைஞர்கள் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்து கண்டு கழித்தனர். இந்த அருங்காட்சியத்தில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்து கூறும் குறும்படம் திரையிடப்படுகிறது. அதுபோல் தொல்லியல் துறையால் தோண்டி எடுக்கப்பட்ட மட்பாண்டங்கள்
நகைகள் , உறைக்கிணறு ஆகியவை காட்சிப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.