சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 43). இவர் நத்தபுரக்கி பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரிய கோட்டை பகுதியைச் சேர்ந்த குமனேஸ்வரன் என்பவர் பன்னீர்செல்வத்திடம் வாளைக் காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.