சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டார நகர் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை மானாமதுரை பழைய பேருந்து நிலையம் பெருமாள் கோவில் தெரு, கண்ணார் தெரு சிப்காட் உட்பட மானாமதுரை நகர் பகுதிக்குள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலையது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.