சிவகங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில், அவரது 295 வது பிறந்த தினத்தினை அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் பேசுகையில்: சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையும், தியாகத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. ஆதலால் அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை அரசின் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், எதிர்காலத்தில் இவர்களை முன் உதாரணமாகக் கொண்டு பலர் நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்ய உறுவாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக கூறப்படும் ஜான்சி ராணிக்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர் தான் வீரமங்கை ராணி வேலு நாச்சியார். ஆனால் வேலுநாச்சியாருக்கு பின்னர் வந்த ஜான்சி ராணி முன்னிலைப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் பெருமையை அடக்குகின்ற வேலையை இப்போது மட்டுமல்ல அப்போதும் வடக்கில் இருந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மட்டுமல்ல அந்தக் காலத்திலும் அரசியலிலும், தியாகத்திலும், மதிநுட்பத்திலும் தமிழகம் என்றும் முன்னிலை பெற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது. வடக்கில் இருந்து என்னதான் முயற்சிகள் எடுத்தாலும் கைகளைக் கொண்டு கதிரவனை மறைக்க முடியாது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேசினார்.