சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிருங்காங்கோட்டை பகுதியில் மினி லாரி கவிழ்ந்ததும் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். சாலையில் சிதிலடைந்து கிடந்த பண்டல்களில் காய்ந்த இலைகள் இருந்தன.
முதற்கட்ட விசாரணையில், அவை பீடி தயாரிக்க பயன்படும் புகையிலை இலைகள் எனவும் இவை பல லட்சம் மதிப்பில் ஆனது என கூறப்படுகிறது அவை வேறு ஏதேனும் உயர் ரக போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் இலைகளா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவில் இலைகள் கடத்தப்பட்டதற்கான காரணமும் மர்மமாக உள்ளது.
கிராண் கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.