பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

68பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள முட்டக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இவை சமீபத்தில் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

மூன்று நாட்கள் தொடர்ந்த யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு, இன்று (8ம் தேதி) காலை கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கடன்கள், மேளதாள ஒலியுடன் சிவாச்சாரியர்கள் தலைமையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து, அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும், ஆராதனை மற்றும் விசேஷ பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில் முட்டக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி