சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் குறி சொல்லும் கோடாங்கி சந்தானம். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தூரத்து உறவினரான தினேஷ் என்பவருடன் ஏற்பட்ட வாய்தகராறில் தினேஷ் மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகியோர் சந்தானத்தை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சந்தானம் திருப்புவனம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்தானம் பலியானார். இதுகுறித்து திருப்புவனம் காவல்துறையினர் தினேஷ் மற்றும் அவரது நண்பர் அஜித்குமாரை கைது செய்து எதற்காக இக்கொலை நடைபெற்றது முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.