இளையான்குடி பேரூராட்சி பொதுநிதி செலவினத்தில் முறைகேடு

85பார்த்தது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் (கோபிநாத்) பொது நிதியில் இருந்து செலவிடப்படும் செலவு தொகையில் அதிகமான முறைகேடுகள் நடந்து வருவதாகவும்பொது சுகாதாரப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங் களுக்கு டீசல் நிரப்புவதில் போலியான பில் தயார் செய்தது, தெரு விளக்கு மற்றும் குடிநீர் மராமத்து உதிரி சாமான்கள் வாங்குவதில் போலியான பில் தயார் செய்தது, குடிநீர் மோட்டார்களை பழுது நீக்கம் செய்வதில் போலியான வவுச்சர்கள் தயார் செய்தது, பேரூராட்சியில் மேற்கொள்ளப்படாத ஒரு சில மராமத்து பணிகளை மேற்கொண்டதாகவும் போலியான வவுச்சர்கள் தயார் செய்தது இவ்வாறு பல வழிகளில் இளையான்குடி பேரூராட்சியை சேர்ந்த பொது மக்களிடம் இருந்து வரியினங்கள் மற்றும் இதர வரவினங்கள் மூலமாக பெறப்படும் பொது நிதியில் மாபெரும் முறைகேடுகள் நடந்துள்ளது.
ஆகவே இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பணியில் சேர்ந்த நாள் முதல் அவரால் செலவிடப்பட்டுள்ள செலவு சீட்டுகளை மறு ஆய்வு செய்தும் மராமத்து பணிகள் மேற் கொண்டதாக கூறப்படும் இடங்களை தல ஆய்வு செய்தால் முறைகேடுகள் தெரியவரும். மேலும் முறைகேடு செய்த பணத்தை இளையான்குடி பேரூராட்சியில் பொது நிதியில் திரும்ப சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி