சிவகங்கை மாவட்டத்தில் ஓடும் அரசு பேருந்துகள் அடிக்கடி பாதி வழியில் பழுதாகி நிற்பதால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக மாவட்ட முழுவதும் பழுதான அரசு பஸ்கள் அதிகமாக ஓடி வருகிறது இதில் பல அரசு பேருந்துகளில் டயர்களில் பட்டன் இல்லாமல் ஓடுவதாலும் வழுக்கை டயரில் பேருந்து இயக்குவதால் அடிக்கடி பஞ்சரும் இதனால் நடுவழியில் அரசு பேருந்துகள் நின்று வருகின்றன இதில் அதிகமாக அவதி ப்படுவோர் பொதுமக்கள், மற்றும் டிரைவர் கண்டக்டர் ஆகியோர்தான், நடுவழியில் நிற்கும் பேருந்துகளில் வந்த பயணிகளை மாற்று பேருந்து அனுப்பிவிட்டு பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஆகியோர் மிகவும் கஷ்டம் படுகின்றனர் குறிப்பாக இவர்களை அரசு பேருந்து பழுதுகளை சரி செய்தும் வருகின்றனர் மாவட்டத்தில் போதுமான மெக்கானிக்கல் இல்லாததால் அவர்களை பழுதுகளை சரி செய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது மாவட்ட முழுவதும் ஓடும் பழுதான பேருந்துகளை மாற்றிவிட்டு புதிய பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.