மர்மமான முறையில் ஐந்து ஆடுகள் பலி விவசாயிகள் வேதனை

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள நத்த பொறுக்கி வலசை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் தங்களது ஆடுகளை தினம் தோறும் மேற்சலுக்காக அழைத்துச் செல்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த பாலு, பாண்டிச்சேரி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் தங்களது நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை நத்தை பொறுக்கி வலசை கண்மாய் பகுதியில் அமைச்சருக்கு விட்டிருந்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக சுருண்டு விழுந்து பலியாகின. இதனால் மிகவும் கவலையிடந்த விவசாயிகள் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்தது தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து பலியான ஆடுகளை பரிசோதனை செய்து மற்ற ஆடுகளுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர். வருவாய் மற்றும் கால்நடை துறையினர் அப்பகுதியில் கிடக்கும் கண்மாய்களில் உள்ள தண்ணீரில் ஏதும் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி