பெண் காவலர் 12 வயது சிறுமியை தாக்கியாதாக புகார்

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமாரின் 12 வயது மகள் மீது பக்கத்து வீட்டுப் பெண் முருகேஸ்வரி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில், முத்துக்குமாரின் குழந்தைகள் பிளாஸ்டிக் பைகளை வைத்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்து முருகேஸ்வரி வீட்டு வாசலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, முருகேஸ்வரி குழந்தைகளை அவதூறாக பேசி தாக்கியதாகவும், இதுகுறித்து முத்துக்குமாரின் குடும்பத்தினர் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பின்னர், காவல் உதவி ஆய்வாளர் குகன் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 12 வயது சிறுமி மீது முருகேஸ்வரி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சிறுமி ஆட்டோவில் மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். முருகேஸ்வரி , தங்கப்பாண்டி, தமிழரசி, முத்துப்பாண்டி, ஆர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முத்துக்குமாரின் குடும்பத்தினர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முருகேஸ்வரி தற்போது சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி