கீழடி அகழாய்வில் சுடுமண் செங்கல் கட்டுமானசுவர் கண்டுபிடிப்பு

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது, தற்போது வரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் கீழடியில் தொல்லியல் துறையினர் ஒரு குழியில் அகழாய்வு மேற்கொண்ட பொழுது சுமார் இரண்டு அடி ஆழத்தில் நாம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக சுடுமண் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 சென்டிமீட்டர் நீளமும், 23, சென்டிமீட்டர் அகலமும் , 6 சென்டிமீட்டர் தடிமன் கொண்டுள்ளது, இதன் மூலம் நம் முன்னோர்கள் நகர நாகரித்கோடு வாழ்ந்ததற்கு அடையாளமாக இது கிடைத்துள்ளது, என்று தொல்லியல் துறை வட்டாரங்கள் தரப்பில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் கூறப்படுகிறது
தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி