சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்தஆர்ப்பாட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் பணியிடங்கள் தனியாருக்கு தரைவார்க்கப்படும் எனவே, நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டுமெனவும் 41 மாத கால பணி நீக்க காலத்தினை வரன்முறை படுத்தல் வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடுசத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர்பாண்டி சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி