சிவகங்கை: சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

55பார்த்தது
சிவகங்கை: சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே என். ஜி. ஓ. , காலனியில் கற்சாலையாக காட்சியளிக்கும் சாலையால் வாகனஓட்டிகள்சிரமப்படுகின்றனர். சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என். ஜி. ஓ. , காலனியில் 10க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன.  

500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியை ஒட்டி தற்போது சட்டக்கல்லூரி பத்திரப்பதிவு அலுவலகம் தீயணைப்பு நிலையம் வட்டாரப் போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு சட்டக் கல்லூரி, டைடல் பார்க் பகுதியும் இதனை ஒட்டியே அமைந்துள்ளது. காரைக்குடி கழனிவாசல், பாண்டியன் நகர், சங்கராபுரம், பர்மாகாலனிஉட்பட பல்வேறு பகுதி மக்களும் எளிதில் என். ஜி. ஓ. , காலனி வழியாக இந்த அலுவலகங்களுக்குச் செல்ல முடியும். என். ஜி. ஓ. , காலனி முடிவு சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து மலைப் பாதையாக காட்சியளிக்கிறது. பெரிய பெரிய கற்கள் பெயர்ந்து கிடப்பதால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி