தாயின் வயிற்றிலேயே குழந்தை உயிரிழப்பு - சாலை மறியல்

74பார்த்தது
சிவகங்கை அருகேவுள்ள சாலூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் சரண்யா ராம்குமார். இந்நிலையில் சரண்யா மீண்டும் கர்ப்பமாக இருந்ததுடன் இடையமேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் வயிற்றில் இருந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக அங்கிருந்த மருத்துவர்கள் சரண்யாவிடம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சரண்யாவிற்கு பிரசவ வலி ஏற்படவே இடையமேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் கணவர் ராம்குமாரை அழைத்த செவிலியர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கவே அதிர்ச்சியடைந்த ராம்குமார் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக அரம்பசுகாதார நிலையத்தில் தெரிவித்த நிலையில் குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து வினவியுள்ளார். ஆனால் உரிய பதிலளிக்கவில்லை என கூறப்படுவதுடன் அந்த தாய் சேய் நலப்பிரிவில் மருத்துவர்களே பணியில் இல்லை என்றும் அதுவே குழந்தை உரிய நேரத்தில் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்படாமல் இறந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவக்கல்லூரி வாயிலில் உள்ள மானாமதுரை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்குவந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி