சேதமடைந்த சிலைகள் - இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எதிரிகளை தண்டிக்க காசு வெட்டி போடும் பழக்கமும் உள்ளது. அதே போல துரோகம் செய்தவர்களை பழிவாங்க இங்கு வந்து சத்தியம் செய்யும் பழக்கமும் உண்டு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் ஒன்பது உண்டியல்கள் மூலம் இரு மாதங்களுக்கு ஒரு முறை 20 முதல் 50 லட்ச ரூபாய் வரை இந்து சமய அறநிலையத் துறைக்கு வருவாய் கிடைத்து வருகிறது. கோயிலில் அம்மன் சிலை அருகே உள்ள பூத கணங்கள் உள்ளிட்ட ஏழு சிலைகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த சிலைகளை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து உபயதாரர்கள் மூலம் சேதமடைந்த சிலைகளை சீரமைக்க அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. இதனையடுத்து இன்று கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன் தலைமையில் கோயில் வளாகத்தில் பாலாலயம் தொடங்கியது. பாலாலயத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். ஒரு மாத காலத்திற்குள் சேதமடைந்த சிலைகள் சரி செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாலயத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி