பேருந்து நிலையத்தில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகும் அவலம்

56பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில்ரூபாய் சுமார்13 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது இதற்கான கட்டிடப் பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாக பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது இந்நிலையில் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து ஏறி செல்வதை தவிர்ப்பதால் எப்போதும் இந்த பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில்
தற்போது இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இளையான்குடி பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட ஒன்பதாம் எண் கடை அருகே மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக மழைநீர் வெளியேறி தூண்களில் கசிவு ஏற்பட்டு தரைத்தளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது பேருந்து
நிலைய கட்டிடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால் தான் இவ்வாறு மேற்கூறையில் விரிசல் ஏற்பட்டு மழை நீரநீர் ஒழுகுவதாக அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது முறையாக அதிகாரிகள் பேருந்து நிலையத்தை கட்டிட பணியின் போது ஆய்வு செய்யாததால் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி