சிவகங்கை: பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆதங்கம்

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பேரூராட்சி கூட்டம் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. தமாகா மாநிலத் தொண்டரணி தலைவரும் 15 வது வார்டு கவுன்சிலருமான அயோத்தி பேசுகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடைய தமாகா வகிக்கும் 3 வார்டுகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும் அடிப்படை பணிகள் கூட செய்து கொடுக்கவில்லை என்றும் திருப்புவனம் பேரூராட்சிகளிலேயே தமாகா வகிக்கும் மூன்று வார்டுகளில் அனைத்து வரிகளையும் முழுமையாக செலுத்தப்பட்டதும் இந்த மூன்று வார்டுகள் மட்டுமே நானே கூட்டி சென்று வரி வசூல் செய்து கொடுத்திருக்கிறேன். 

எங்கள் வார்டுகளைப் புறக்கணிப்பதற்கான காரணம் என்ன என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் அயோத்தி இந்த பேரூராட்சியில் சுய உதவிக் குழு மூலம் மற்றும் டெங்கு பணியாளர்கள் 40 பேர் வேலை செய்யாமலே அதற்கான தொகை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தொடர்ந்து வார்டுகள் புறக்கணிக்கப்பட்டு வந்தால் அடுத்த முறை யாரையுமே வரி கொடுக்க விடாமல் செய்து விடுவேன் என்றும் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி