சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்நிலையத்துக்கு விருதுநகர் திருச்சி பயணிகள் ரயில் வந்தது. காலை 8. 05 மணிக்கு திருச்சிக்கு புறப்பட தயாரானபோது, ரயில் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்தார். அவரை ரயில்வே ஊழியர்கள் விரட்டிப் பிடித்து, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் நின்றுகொண்டிருந்தஇடத்தில் தண்டவாளத்தில் 4 கிளிப்புகள் கழன்று கிடந்ததால், அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கிளிப்புகளை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்த பின்னர், விருதுநகர்-திருச்சி ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஏற்கெனவே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சூடியூர் இடையே செப். 16-ம் தேதி தண்ட வாளத்தில் 440 கிளிப்புகள் கழன்று கிடந்தன. இதுவரை குற்ற வாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப் பட்டவர் போல் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மானாமதுரை ரயில் நிலையம் அருகிலேயே கிளிப்புகள் கழன்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.