தர்ம முனிஸ்வரர்கோவில்திருவிழாவை முன்னிட்டுமாட்டுவண்டிபந்தயம்

71பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி கிராமத்தில் அமைந்துள்ள தர்ம முனிஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு அதிகரை , வேலூர் , முருக பஞ்சான் , கிராமத்தினர் நடத்திய மாட்டு வண்டி எல்கை பந்தயம் இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயம் காட்டூரணி பகுதியில் மானாமதுரை - தஞ்சாவூர்தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 58 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இந்தப் இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 13மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 20மாடுகளும்
பூஞ்சிட்டு மாடு பிரிவில்25 மாடுகளும்
கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கி. மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கி. மீ. தொலைவும்
பூஞ்சிட்டு மாட்டிற்கு 6. கி. மீ தொலைவும்
எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டியினை மானாமதுரை அதிகரை வேலூர் முருகப்பஞ்சான் சிவகங்கை பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் சாலையின் இரு புறங்களிலும் இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி