சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீயனூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் சாமி கும்பிடுவதில் இரு பிரிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த 20 டன் விறகுகளை அதே ஊரை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன், மலைச்சாமி, கொள்ளிடம், சேகர், ரவி என்ற மருது உட்பட எட்டு பேரும் தீ வைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராசு மானாமதுரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எட்டு பேர் மீது இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.