சிவகங்கை மாவட்டம்,
மானாமதுரை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மூலம், மக்கும் மற்றும் மக்காத வகைகளாக குப்பைகள் பிரிக்கப்படுகின்றன.
இவற்றில் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல், பாலம் கீழே கொட்டப்பட்டு, அவ்வப்போது தீ வைக்கப்படுகிறது. நேற்று மாலை, அக்குப்பைகளில் தீ வைக்கப்பட்டதன் விளைவாக, பெரும் அளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கடுமையான புகையில் சிக்கி அவதிப்பட்டன. குறிப்பாக, அருகிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில், கண்களில் எரிச்சலுடனும் சிரமத்துடன் சென்றனர்.