மணல் லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே டி. ஆலங்கும் கிராமத்தில் மணல் லாரி மோதியதில் ரோட்டில் நின்று கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டி. ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், கூலி தொழிலாளியான இவரது மகன் இரண்டரை வயது கொண்ட தயாஆனந்தன் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். இன்று அங்கன்வாடிக்கு செல்ல ரோட்டில் நின்று கொண்டிருந்த போது அதே தெருவில் கட்டுமான பணிக்காக எம் சாண்ட் மணல் இறக்கிய லாரி பின்னோக்கி நகர்ந்தததில் லாரி டயரில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் இன்று மதியம் சுமார் மூன்று மணியளவில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி