மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப சுவாமி வீதியுலா

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பசுவாமி வீதியுலா உற்சவம் நடந்தது. திருப்புவனம் நெல்முடிகரையில் ராமச்சந்திரன் குருசுவாமி தலைமையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் ஐயப்பன் விக்ரகத்துடன் வீதியுலா வந்தனர். நெல்முடிகரையில் தொடங்கி கோட்டை, புதூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஐயப்பன் பாடல்களை பாடியபடியே வலம் வந்தனர். சிறுவர்கள் பலரும் வேடமணிந்து பக்தி பாடல்கள் பாடியபடியே வந்தனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி