ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கட்சி நிர்வாகி விழாவிற்கு செல்வதற்காக இளையான்குடி வழியாக பரமக்குடி செல்லும் பொழுது இளையான்குடி நகர் பகுதி வழியாக எச். ராஜா வாகனம் சென்ற பொழுது போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இதனால் போலீசாருக்கும் எச். ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் ஆனதால் அந்த இடமே பரபரப்பானது. எதற்காக எனக்கு தடை விதிக்கிறீர்கள் இந்தப் பகுதியில் போகக்கூடாது என்று எதுவும் தடை உள்ளதா இளையான்குடி என்ன பாகிஸ்தானில் உள்ளதா என பல்வேறு கேள்விகளை கேட்டதால் பரபரப்பானது.
பின்னர் போலீசார் நகர் பகுதி வழியாகவே அவரை பரமக்குடிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறும் பொழுது எப்போதும் புறவழிச் சாலையை பயன்படுத்தி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்வது வழக்கம் ஆனால் நகர் பகுதிக்கு வருவதால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி அவரிடம் எடுத்துக் கூறினோம் என்றனர்.