பழையனூர் பகுதியில் 18 வயது இளம் பெண் மாயம்

782பார்த்தது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த அஜிதா(18). இவர் பத்தாம் வகுப்பு படிப்பைபாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து இளம் பெண்ணின் தந்தை சந்தானம் , பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன இளம்பெண் குறித்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி