அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் நகை திருடியதாக அளித்த புகாரி விசாரணையின் போது கோவில் காவலாளி அஜித் குமார் வயது 29 இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இந்நிலையில் இன்று திருப்புவனம் மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் கருத்துக்களை பதிவு செய்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி