அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக பணியாளராக அஜித்குமார் நகை திருட்டு வழக்கு எனக்கூறி தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக அடித்து கொன்றதில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அஜித்குமார் விசாரணை செய்யப்பட்ட போது அவரது சகோதரர் நவீனையும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தரேலால் சுரேஷ் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் காவலர்கள் தாக்கியதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார் அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைக்காக இரத்தம், மற்றும் கால்பகுதியில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என மருத்துவர்கள் கூறியதால் தற்போது நலமுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மடப்புரத்தில் தனிப்படை காவலர்கள் தன்னையும் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக அங்கிருந்த காவல் துறையினரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி