சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மணலூர் வழியாக செல்லும் மதுரை -ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மணலூர் பாலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திமுகவுக்கு எதிராக மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அதிமுக நிர்வாகி மணிமாறன் என்பவர் இரண்டு போஸ்டர் ஒட்டியுள்ளார். முதல் போஸ்டரில்அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் யார்?
சொல்லுங்க முதல்வரே!!! துணை முதல்வரை!!! தூத்துக்குடி பாராளமன்ற உறுப்பினரே!! பதில் சொல்லுவீர்களா சாரே வாசகம் உள்ளது. அதேபோல் இரண்டாவது போஸ்டரில்
கண்ணகியின் படத்தை போட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசை கண்டிக்கிறோம் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டும். இதனால் சிவகங்கை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.