சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தாநகர் பகுதியில் 20 வருடங்களாக டீக்கடை நடத்தி வருபவர் முருகன். இன்று அவரது டீக்கடையில் சண்டை போட்டவர்களை கடையை விட்டு வெளியேறுமாறு முருகனின் மனைவி கூறியதாகவும் அங்கு குடிபோதையில் இருந்த தீனதயாளன் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படும் நிலையில் அவருடைய கணவரான முருகன் என்பவருக்கு தகவல் தெரிவித்த நிலையில் கடைக்கு வந்த முருகன் ஏன் அவதூராக பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார், அதற்கு முருகனையும் ஆபாச சொற்களால் பேசி முகம் மற்றும் கன்னங்களில் அடித்து கம்பியால் குத்தி கிழித்து காயம் ஏற்பட்ட நிலையில் நான் உன்னை உயிரோடு விட மாட்டேன் என்று கூறி வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்துக் கொண்டு வந்து கடையில் உள்ள பொருள்களை சூறையாடி தாகவும் எதார்த்தமாக அங்கு வந்த காவலர் ஒருவர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்றார் காயம் ஏற்பட்ட முருகன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் மேலும் போதையில் அருவாளுடன் வந்து கடையை சூறையாடிச் சென்ற சம்பவம் மானாமதுரை பகுதியில்இன்று காலை சுமார் பத்து மணியளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது